Anton Frey – Passover Book (Tamil)
Anton Frey - Passover Book (Tamil)
ஆன்டன் க்ளமன்ஸ் ஃப்ரே அவர்கள் ஜுலை 1, 1895-ஆம் வருஷத்தில், நியூயார்க்கினுடைய ஒரு பெரிய நகரத்தின் ஒரு பகுதியான பிராங்ஸ் ஊரில் பிறந்தார். மாலை நேர செய்தித்தாளில் காணப்பட்ட ஒரு விளம்பரத்தின் வாயிலாக அவர் சத்தியத்தினை அறிய வந்தார். அன்பிற்குரிய சகோதரர் ரசல் அவர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தப்படுவது அவருக்கு இனிமையானதாக இருந்தது, மேலும், நியூயார்க்கிலுள்ள புரூக்லினில் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்; அங்கு கொலம்பியா ஹைட்ஸ் என்ற இடத்தில்தான் பெத்தேல் குடும்பத்தினர் வசித்தனர். அந்தச் சமயத்தில் சகோதரர் ரசல் தனியாக இருந்தார், மேலும், அது, இந்தத் தேவ மனிதரோடு தனிப்பட்ட நேரடி உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கச்செய்தது. அவர் 1922 வாக்கில் ஜெர்சி நகர சபையின் மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 13, 1982 அன்று அவர் மரிக்கும்வரையில் சபைக்கான ஆய்வுப்பாடங்களை நடத்தியும், பொது ஊழியங்களில் ஈடுபட்டும் வந்தார்.
சகோதரர் ஆன்டன் ஃப்ரே அவர்கள், வனாந்தரத்திலிருந்த இஸ்ரயேலின் ஆசரிப்புக்கூடாரத்தைப் பற்றின தனது நுணுக்கமான குறிப்புகளுக்காக மிக நன்றாய் அறியப்பட்டவர். மற்ற பல பாடங்களைப்பற்றிய அவரது அதே இணையான உன்னிப்பான குறிப்புகள் அனைத்தும் குறைவாகவே அறியப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் கிடைக்கவில்லை என்றாலும், பெரும்பாலானவைகள், இப்போது அச்சிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கின்றன.
சகோதரர் ஃப்ரே அவர்களின் பஸ்கா பற்றின குறிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பான நினைவுகூருதல் பற்றியதான பாடத்தின் முதல் பதிப்பு 1991-ஆம் வருஷத்தில் அச்சிடப்பட்ட வடிவத்தில் கிடைக்கப்பெற்றது. அவரது குறிப்புகள் யாவும் ஆரம்பத்தில் பிரசுரத்திற்காக தயாரிக்கப்படவில்லை , மாறாக சகோதரர் ஃப்ரே அவர்களின் சொந்த தனிப்பட்ட ஆய்வுக்காக தயார் செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்டவகையான பாட விஷயங்களை மேற்கோள் காட்டுவதற்காக அவர் அநேக எண்ணிக்கையிலான உள்தள்ளல் பாணியை இந்தக் குறிப்புகளில் அவர் பயன்படுத்தியுள்ளார். ஒரே சீரானதாய் இருப்பதற்காக, இந்த வெளியீடும், பல்வேறு உள்தள்ளல் பாணியைப் பயன்படுத்தியுள்ளது, ஆனாலும் இதில் மூலப்பிரதியின் பாங்கான வடிவமைப்புகள் அனைத்தும் பின்பற்றப்படவில்லை . இந்தக் குறிப்புகளின் முதல் பதிப்பினுடைய பொதுவான பாங்கு, கூடுதல் குறிப்புகளுடன் தக்கவைக்கப்படுகிறது, உரையில் இடையில் செருகப்பட்ட சுட்டுதலோடு அவைகள் நினைவுக் குறிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
Attached Files
File | Action |
---|---|
Anton Frey - Passover Book.bok.mybible | Download |

- Version 1.1
- Download 51
- File Size 3.4MB
- File Count 1
- Create Date March 31, 2020
- Last Updated March 31, 2020